புதிதாக கட்டி திறக்கப்பட்ட நெல் சேமிப்பு நிலையம் - முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்
- திருவாரூர் கிடங்கு வளாகத்தில் புதிதாக கட்டி திறக்கப்பட்ட மேற்கூரையுடன் கூடிய நவீன நெல் சேமிப்பு நிலையத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- திருவாரூர் கிடங்கு வளாகத்தில் 2.35 கோடி ரூபாய் செலவில் 4250 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரையுடன் கூடிய நவீன நெல் சேமிப்பு நிலையம் முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.
- இந்த ஆய்வு கிடங்கை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடியாக சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- இந்த ஆய்வின்போது, விவசாயிகளின் கடின உழைப்பில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள நெல்மணிகளை இயற்கைப் பேரிடர் மற்றும் மழைப் பொழிவுகளிலிருந்து பாதுகாப்பாக கிடங்குகளில் சேமித்து வைத்திட வேண்டும் என றும், அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
- இச்சேமிப்பு நிலையத்தில் தற்போது 1500 மெட்ரிக் டன் நெல் சேமிக்கப்பட்டுள்ளது என அலுவலர்கள் தெரிவித்தனர்.
Next Story