இறந்தவர் வங்கி கணக்கு விவரங்களை தர மறுப்பு - நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
- திருவாரூர் அருகே உயிரிழந்த கணவரின் வங்கி கணக்கு விவரங்களை, மனைவிக்கு தர மறுத்த தனியார் வங்கிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்தவர் மோகன்.
- இவர் அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தார்.
- இதனிடையே, கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இவர் உயிரிழந்ததையடுத்து, அவர் வாங்கிய கடன் மீது வங்கி சட்ட நடவடிக்கை மேற்கொண்டது.
- இதையடுத்து, 2013-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை தனது கணவரின் வங்கி கணக்கு விவரங்களை தனக்கு தர வேண்டுமென அவரது மனைவி தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தார்.
- ஆனால், பல காரணங்களைக் கூறி கணக்கு விவரங்களை தெரிவிக்க வங்கி நிர்வாகம் மறுத்து விட்டது.
- இது குறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், வங்கிக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Next Story