"எங்கள் ஊருக்கு நியாய விலைக்கடை வேண்டும்" - 4 கி.மீ நடந்து செல்ல வேண்டிய அவலம்...
- திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த தேவிமங்கலத்தில், நியாய விலைக்கடை இல்லாததால் 4 கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை காணப்படுகிறது.
- தேவி மங்கலத்தில் 180க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். ஆனால், அங்கு நியாய விலைக்கடை இல்லாததால், பரிக்கல்பட்டில் உள்ள நியாய விலைக்கடை ஒதுக்கப்பட்டுள்ளது.
- 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால், பொருட்கள் விநியோகிக்கும் நேரம் தெரியாமலும், பொருட்கள் கிடைக்காமலும் அவதிப்படுகின்றனர்.
- மேலும், வயதானவர்களின் கை ரேகை பதியாததால், அங்கு சென்று நேரம் வீணாவதாகவும், அதனால், தங்களது பகுதிக்கு நியாய விலைக்கடை அமைக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story