திருவண்ணாமலை தீப திருவிழா.. விமரிசையாக நடந்த பஞ்சமூர்த்திகள் வீதி உலா | Thiruvanamalai
திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவின் மூன்றாம் நாளான நேற்று பஞ்சமூர்த்திகளின் வீதியுலா வெகு விமர்சையாக நடைப்பெற்றது
திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீப திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொங்கியது. தீபத்திருவிழாவின் மூன்றாம் நாளான நேற்று விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனுறை, உண்ணாமுலையம்மன் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள், சிம்ம வாகனம் மற்றும் வெள்ளி அன்னவாகனத்தில் வீதியுலா வந்தனர். முன்னதாக, கோயிலில் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்
Next Story