2 பிள்ளைகளை கள்ளக்காதலன் வீட்டுக்குஅழைத்து சென்று பலி கொடுத்த காதலி - கடைசியில் அவரின் உயிரும் பறிபோனது

x

பீகாரைச் சேர்ந்த குட்டுலு என்பவர், சோழவரத்தை அடுத்த ஜெகநாதபுரம் சத்திரத்தில் தங்கியிருந்து, அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவருடன் பணியாற்றிய வந்த அஸ்ஸாமைச் சேர்ந்த துவர்க்கா பார் என்பவர், தனது மனைவி சுமிதா பார் மற்றும் 2 குழந்தைகளுடன் இருளிப்பட்டு பகுதியில் வசித்து வந்தார். குட்டுலுவுக்கும், துவர்க்கா பாரின் மனைவி சுமிதா பாருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததாக தெரிகிறது. கடந்த 7-ஆம் தேதி, சுமிதா பாரின் வீட்டுக்குச் சென்ற குட்டுலு, அவருடன் தகராறு செய்து, அவருடைய தலையில் வெட்டி விட்டு, இரண்டு குழந்தைகளையும் கொடூரமாக கொன்று விட்டு தப்பிச் சென்றார். தகவலறிந்து வந்த சோழவரம் போலீசார், சுமிதா பாரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து குட்டுலுவை தேடி வருகிறன்றனர். இதற்கிடையே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சுமிதா பார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்