பகலில் நோட்டம், இரவில் திருட்டு...நடமாடிய 'பலே' திருடிகள் - செக் வைத்த பொதுமக்கள்
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகே தீரன் பட பாணியில் தனியாக இருக்கும் வீடுகளை குறிவைத்து திருடி வந்த 2 பெண்களை பொதுமக்கள் விரட்டிப் பிடித்தனர்.
மடத்துக்குளத்தை அடுத்த ஜோத்தம்பட்டி கிராமத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் சிறுசிறு பொருட்கள் திருடு போனதால், கணியூர் காவல் நிலைய போலீசார், ரோந்து பணியை தீவிரப்படுத்தி இருந்தனர்.
இந்நிலையில், பிற்பகல் நேரத்தில், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பூட்டை உடைத்து 2 பெண்கள் திருட முயன்றுள்ளனர். காவலுக்கு இரண்டு பெண்களை அவர்கள் நிறுத்தி விட்டுச் சென்றுள்ளனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒருவரைக் கண்டதும், அந்த பெண்கள், அவருடைய கவனத்தை திசை திருப்ப முயன்றனர்.
அதற்குள் வீட்டின் உரிமையாளர் வந்து விட்டதால் அந்த பெண்கள் தப்பியோட முயற்சித்தனர்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் துரத்திச் சென்று 2 பெண்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள் இருவரையும் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.