கடல் அரிப்பால் அழியும் அபாயத்தில் கிராமம்.. கோரிக்கை விடுத்த மீனவர்கள் - நேரில் உறுதி கொடுத்த பேரவைத் தலைவர் அப்பாவு
- நெல்லை மாவட்டம், கூடுதாழையில் கடல் அலையின் வேகத்தால் அரிப்பு ஏற்பட்டு வீடுகளை கடலுக்கு இழுத்து செல்லும் அபாயம் உள்ளதால், தூண்டில் பாலம் அமைக்க கோரி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சம்பவம் அறிந்து வந்த சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு கடல் அரிப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.
- பின்னர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், வரும் 20-ஆம் தேதி போராட்டக் குழுவினர் சென்னைக்கு வந்தால், அமைச்சர் துரைமுருகன் மற்றும் முதல்வரை சந்தித்து, தூண்டில் பாலம் அமைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.
- ஆனால் சமாதானம் அடையாத மீனவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story