சொந்த வண்டி போல் பகுமானமாக பைக்கை தூக்கி சென்ற திருடர்கள் - ட்விஸ்ட் வைத்த மூன்றாம் கண்

x

ஒட்டன்சத்திரம் அருகே, வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை, இளைஞர்கள் இருவர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அத்திக்கோம்பை பகுதியைச் சேர்ந்த உமர் முக்தர் என்பவர், தனது இருசக்கர வாகனத்தை வீட்டில் நிறுத்தியுள்ளார். இதை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத இருவர், நள்ளிரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியான நிலையில், அந்த இளைஞர்கள் குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்