இடம் தெரியாமல் கை வைத்து வசமாக மாட்டிய திருடர்கள்! - அலையாத்திக் காட்டுக்குள் அதிரடி கைது

x

திருத்துறைப்பூண்டி அருகே பின்னத்தூர் மெயின் ரோடு பகுதியில் வசித்து வரும் கண்ணன் என்பவர், முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா, வீட்டில் தனியாக இருந்தபோது, மர்மநபர்கள் இருவர் அவரது வீட்டின் கதவை தட்டியுள்ளனர். கதவை திறந்து பார்த்தபோது, சங்கீதாவிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த 8 சவரன் தங்கச் சங்கிலியை, மர்மநபர்கள் பறித்து, இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். இதுதொடர்பான புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார், முத்துப்பேட்டை அலையாத்திக் காடு பகுதியில் பதுங்கி இருந்த தர்மதுரை என்கிற வில்லியம்ஸ் மற்றும் நல்லதம்பி ஆகிய இருவரை கைது செய்ததுடன், தங்கச் சங்கிலியையும் பறிமுதல் செய்தனர். தலைமைக் காவலரின் மனைவியிடமே மர்மநபர்கள் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம், அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்