மேகதாது அணை கட்ட சொல்லுவது அவர்களுக்கு ஆசை... ஆனால் உரிமை கிடையாது -அமைச்சர் துரைமுருகன்
மேகதாது வில் அணை கட்டுவது என்று கர்நாடகா சொல்லுவது அவர்களின் ஆசை, கட்ட முடியாது என சொல்வது நம்முடைய உரிமை என்று, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வேலூரில் கலிஞ்சூர் ஏரி, தாரா படவேடு ஏரிகளை சுற்றுலா மையமாக மாற்ற மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து அவர் ஆய்வு செய்தார். காட்பாடியில் உள்ள தமிழக அரசின் உள் விளையாட்டு அரங்கத்தை ஆய்வு செய்த பின், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், மேகதாதுவில் நிச்சயம் அணையை கட்ட முடியாது கட்டவும் விடமாட்டோம் என்றும் உறுதி அளித்தார்.
Next Story