"என் பொண்ண லாரி ஏத்தி கொன்னுட்டாங்க.." பெண் எஸ்.ஐ. இறப்பில் பகீர் கிளப்பும் தாய் - அசாமை அதிரவைத்துள்ள 'லேடி சிங்கம்' மரணம்
அசாமின் பெண் சிங்கம் என அழைக்கப்பட்ட ஜூன்மோனி ரபா விபத்தில் சிக்கி பலியான நிலையில், மகளின் மரணம் திட்டமிட்ட சதி என தாய் குற்றம் சாட்டியுள்ளார்.
அசாம் மாநில காவல்துறையில் பெண் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ஜூன்மோனி ரபா. 'லேடி சிங்கம்' என்றும் இந்தி படத்தில் வருவது போல தபாங் காப் என்றும் பொதுமக்களால் அழைக்கப்பட்டார். ஜூன்மோனி ரபா காரில் அசாம் நோக்கி சென்ற போது எதிர்பாராத விதமாக வந்த கன்டெய்னர் லாரி, கார் மீது மோதியது. இதில் பெண் காவல் உதவி ஆய்வாளர் ஜூன்மோனி ரபா, உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்டெய்னரை ஓட்டி வந்த, ஓட்டுநர் தப்பியோடியதால், போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர். இதனிடையே மகளின் மரணம் திட்டமிட்ட சதி என்றும், எனவே, வழக்கை நேர்மையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அவரது தாய் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அசாம் முதல்வருக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.