"உன்னை தீர்த்து கட்ட சொல்லிட்டாங்க.." சினிமாவை மிஞ்சிய பிளான்.. சென்னை நீதிமன்ற வளாகத்தில் பயங்கரம்
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியான ராதாகிருஷ்ணனின் தளபதிகளாக மதுரை பாலா, மற்றும் அப்பாஸ் ஆகியோர் வலம் வந்தனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு பிரபல ரவுடி மயிலாப்பூர் சிவக்குமாரை கொலை செய்த வழக்கில் மதுரை பாலா, அப்பாஸ் உள்ளிட்ட 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவக்குமார் கொலையில், சம்பந்தமே இல்லாத தன்னை மதுரை பாலா சேர்த்துவிட்டதாக அப்பாஸ் கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது.
சில மாதங்களிலேயே அப்பாஸ் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
அதனை தொடர்ந்து ரவுடி அப்பாஸீம், அவரது கூட்டாளியான சக்திவேலும், பாலாவுக்கு வரவேண்டிய மாமூல் தொகையை வசூலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த தகவல் சிறையில் இருந்த பாலாவிற்கு தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ரவுடி சக்திவேலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் சிலர், மதுரை பாலா உன்னை தீர்த்து கட்ட சொல்லிவிட்டதாக கூறி மிரட்டியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், தன்னுடைய கூட்டாளியுடன் சேர்ந்து மதுரை பாலாவை சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் வைத்து தீர்த்துக்கட்ட முயற்சித்து, கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.