"இதெல்லாம் ஏற்றுக்கொள்ள கூடியதா இல்ல" - ஊராட்சி மன்ற தலைவர் ஆவேச பேட்டி
தொடர் முறைகேட்டில் ஈடுப்பட்டு வருவதாக கூறி பொழிச்சலூர் ஊராட்சி மன்ற தலைவர் மீது திமுக உள்ளிட்ட 13 கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். பொழிச்சலூர் ஊராட்சிமன்ற தலைவராக இருப்பவர் வனஜா தயாளன். இவர் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து பொழிச்சலூர் ஊராட்சி பகுதியில் வரி என்ற பெயரில் பல முறைகேடு நடைபெற்று வருவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், துணைத்தலைவர் ஜோசப் தலைமையில் 13 கவுன்சிலர்கள் புறக்கணிப்பு செய்து, தலைவர் வனஜா தயாளன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். தம் மீது அடிப்படை ஆதாரம் இன்றி பெண் என்பதால் இழிவுபடுத்தி வருவதாக வனஜா தயாளன் புகார் தெரிவித்துள்ளார்.
Next Story