“எனது குடும்பத்திடம் என் உடலை புதைக்கவோ! எரிக்கவோ பணம் இருக்காது“ - இறக்கும் முன் உருக்கமான கடிதம்

x

சேலத்திலிருந்து விருத்தாச்சலத்திற்கு சென்ற ரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரின் சடலம் தண்டவாளத்தில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உயிரிழந்த இளைஞரின் தற்கொலை கடிதத்தை கைப்பற்றி உள்ளனர். அதில் தமிழக முதலமைச்சருக்கு, எனது குடும்பத்திடம் எனது உடலை புதைக்கவோ! எரிக்கவோ பணம் இருக்காது, அதனால் அரசாங்கம் இறுதி சடங்கை நடத்த உதவுமாறு கேட்டுக்கொள்வதாக எழுதி இருக்கிறார். மேலும் எனது குடும்பம் வறுமையிலும், கடன் தொல்லையிலும் மிகமிக வருந்தி தவிக்கிறது. நான் எனது கிருஷ்ணனை பார்க்க செல்கிறேன். அம்மா,அப்பா,அண்ணன்,தம்பி யாரும் வேதனை படவேண்டாம்.பக்தியால் முக்தி அடைய இந்த வழியை முடிவு செய்கிறேன் என எழுதி இருக்கிறார். உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றர்.


Next Story

மேலும் செய்திகள்