"நிலம் கையகப்படுத்த என்எல்சி வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்" -அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
ஆன்-லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கான பரிந்துரைக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளித்து சட்டமாக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். விருத்தாசலத்தில் நடைபெற்ற பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, அம்பிகா, ஆருரான் ஆகிய 2 சர்க்கரை ஆலைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றார். நிலம் கையகப்படுத்த கிராமங்களுக்கு என்எல்சி சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என எச்சரித்த அன்புமணி, ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கான பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து சட்டமாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Next Story