"சாதி, நம்பிக்கை, நிற அடிப்படையில் பாகுபாடு பார்க்க கூடாது" -நீதிமன்றம் பரபரப்பு கருத்து

x

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகாவில் உள்ள அய்யனார் மற்றும் கருப்பர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதி முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்த போது, கோவில் , அனைத்து பக்தர்களுக்கும் பொதுவான வழிபாட்டுத் தலம் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் கடவுள் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் கடவுளை வழிபட அனைத்து உரிமைகளும் உண்டு என தெரிவித்த நீதிமன்றம், ஒருவரின் சாதி, நம்பிக்கை, நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு பார்க்க கூடாது எனவும் கருத்து தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்