இந்த ஏடிஎம்-ல பணம் மட்டுமில்லை...! - தஞ்சையில் மக்கள் கவனம் ஈர்க்கும் சூப்பர் ஏடிஎம் |
தஞ்சாவூரில் உள்ள ஏ டி எம் மையம் ஒன்றில் பெரியகோயில், தலையாட்டி பொம்மை ஓவியங்களுடன் ஒட்டப்பட்டுள்ள படங்களை மக்கள் வெகுவாக ரசித்து செல்கின்றனர்.
புதுக்கோட்டை சாலை காவேரி நகரில் உள்ள ஏடிஎம்-ல் தஞ்சையின் பெருமைகளை பறை சாற்றும் விதமாக ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெரிய கோயில், புவிசார் குறியீடு பெற்ற தலையாட்டி பொம்மைகள், கலை சிற்பங்கள் ஆகியவற்றின் ஓவியங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதுடன், தஞ்சைக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தஞ்சையின் பெருமைமிக்க அடையாளங்களை தெரிந்து கொள்ள மேலும் வசதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story