"சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை" - அமைச்சர் சேகர்பாபு தகவல்
தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், சென்னையின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கவில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை ரிப்பன் மாளிகையில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2021ம் ஆண்டு மழைநீர் தேங்கிய இடங்களில் தற்போது நீர் தேங்கவில்லை என்று கூறினார். சென்னையில் உள்ள 21 சுரங்கப் பாதைகளில், தண்ணீர் தேங்காத வகையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்...
Next Story