"மதிமுகவில் வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை" - வைகோ பரபரப்பு பேட்டி

x

மதிமுக உட்கட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பொதுச்செயலாளராக வைகோவும், முதன்மைச் செயலாளராக துரை வைகோவும் போட்டியின்றி தேர்வாக உள்ளனர்.

மதிமுகவின் உட்கட்சி தேர்தல் ஜூன் 14ஆம் தேதி நடைபெறும் நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு வைகோவும், முதன்மைச் செயலாளர் பதவிக்கு துரை வைகோவும், அவைத் தலைவர் பதவிக்கு அர்ஜூன் ராஜூவும் மனுத்தாக்கல் செய்தனர். இதுதவிர பொருளாளர், துணை பொதுச்செயலாளர் பதவிக்கும் நிர்வாகிகள் மனுத்தாக்கல் செய்தனர். இவர்களை எதிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், தற்போது தாக்கல் செய்தவர்களே ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். பின்பு பேசிய வைகோ, மதிமுகவில் வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், தனது மகன் துரை வைகோ வாக்கெடுப்பு மூலமாகவே தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்