"பேச வார்த்தையில்லை, கண்ணீர் வருகிறது" -கோபாலபுரம் வீட்டுக்குவந்த முதல் உரிமையாளர் பேத்திநெகிழ்ச்சி

x

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வாழ்ந்து மறைந்த கோபாலபுர இல்லத்தில் ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பு அரங்கேறியுள்ளது

.திமுக தலைவராக பொறுப்பேற்று இன்றுடன் ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்,

மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் கோபாலபுர இல்லத்திற்கு வருகை தந்தார். அங்கு கருணாநிதியின் உருவபடத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், தங்கை செல்வி மற்றும் சகோதரர் மு.க.தமிழரசு மற்றும் அமைச்சர்கள் துரைமுருகன், முத்துசாமி, எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பின் போது, கோபாலர இல்லத்தின் முன்னாள் உரிமையாளரான

சரவேஸ்வரர் ஐயரின் பேத்தி சரோஜா சீத்தாராமன் தன்னுடைய குடும்பத்துடன் கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை தந்தார்.

அவரை முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வரவேற்றதோடு, முதலமைச்சரே வீட்டை சுற்றி காட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்