நெல்லை பேச்சு வழக்கில் பேசிய பேராசிரியர் - தவறாக புரிந்து தாக்கிய மாணவிகளின் பெற்றோர்
- நெல்லை பேச்சு வழக்கில் பேசிய மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியரை, மாணவிகளின் பெற்றோர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
- தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த சண்முகராஜா என்பவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வரலாற்று துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
- வழக்கம்போல், வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல், பேராசிரியர் சண்முகராஜாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தியது.
- இதனைக் கண்டு மற்ற மாணவிகள் கூச்சலிட்டதால், அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
- தாக்குதலில் காயமடைந்த சண்முகராஜாவை, மாணவிகள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
- இதுதொடர்பான புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தியதில், உதவிப்பேராசிரியர் சண்முகராஜா, நெல்லை பேச்சு வழக்கில் பேசியதால், மாணவிகள் அதனை தவறாக புரிந்துகொண்டு, பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
- மாணவிகளின் பேச்சை நம்பி, பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
- எனினும் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story