"அது எப்படிங்க நீங்க பேசலாம்" - டீச்சரை கதிகலங்க வைத்த பெற்றோர் | Theni | Teacher | School Students

x

"அது எப்படிங்க நீங்க பேசலாம்" - டீச்சரை கதிகலங்க வைத்த பெற்றோர்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே, மாணவிகளை தகாத வார்த்தையால் திட்டியும், ஆபாசமாக நடந்து கொள்வதாகக் கூறி, அரசுப் பள்ளி ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவிகளின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் இயங்கி வரும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், உடற்கல்வி ஆசிரியராக உள்ள வாசுகி என்ற ஆசிரியை, மாணவிகளை தகாத வார்த்தைகளைக் கூறி திட்டுவதாகவும், மாணவிகளிடம் ஆபாசமாக நடந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. மேலும், பள்ளியில் போதிய கழிப்பிட வசதிகள் இல்லாததால், மாணவிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாவதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர், உடற்கல்வி ஆசிரியை மீது மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அரசு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, பெரியகுளம் வடகரை காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், சம்பந்தப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கழிப்பறை வசதிகள் செய்து தரப்படும் என்றும் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்