கோர்ட்டின் வினோத தீர்ப்பால் வீட்டை விட்டு வெளியே வராத வயதான தம்பதி - அழுதுகொண்டே உள்ளே இருக்கும் சோகம்.. தேனியில் பரபரப்பு

x
  • தேனியில் நீதிமன்ற உத்தரவின் படி ஒரு வீட்டின் பாதை, அடைக்கப்பட்டதால், வயதான தம்பதி வெளியே வர முடியாமல் அவதியடைந்துள்ளனர்.
  • தேனி நகரில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு எதிரே குடியிருந்து வருபவர் காமாட்சி.
  • இவரது வீட்டின் அருகே, பெரியசாமி என்பவர் தனது வயதான மனைவியுடன் வசித்து வருகிறார்.
  • இதனிடையே, காமாட்சி மற்றும் பெரியசாமி வீட்டிற்கு இடையே இரண்டரை அடி நீளமுள்ள நடைபாதை உள்ளது என்றும், இந்த பாதை தனக்கு தான் சொந்தம் என காமாட்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
  • இந்த வழக்கில், நீதிமன்றம் காமாட்சிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் வழக்கறிஞர் முன்னிலையில் பாதையை பலகை வைத்து அடைக்கும் பணி நடைபெற்றது.
  • பாதை பறி போவதை தொடர்ந்து பெரியசாமி மற்றும் அவரது மனைவி வீட்டை விட்டு வெளியே வர மறுத்தனர்.
  • நீதிமன்ற உத்தரவின் படி பெரியசாமி வீட்டு வாசலில் தடுப்பு பலகைகள் அடைப்பட்டதால், பெரியசாமியும் அவர் மனைவியும் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிக்குள்ளாயினர்.
  • இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வயதான தம்பதி, செய்வதறியாது வீட்டில் அழுத படி உள்ளது காண்போரை, வேதனையடைய செய்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்