ஆப்பிள் ஐ-போன்கள் அடங்கிய பார்சல் திருட்டு..சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

x

ஐ-போன்கள் அடங்கிய பார்சலை டெலிவிரி செய்ய வந்த நிலையில், கடை மூடப்பட்டிருந்ததால் கடை வாசலில் வைத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சில மணி நேரம் கழித்து அதே கடைக்கு வந்த இளைஞர், பார்சல் திருடு போனதை அறிந்து அதிர்ச்சியடைந்து போலீசில் புகாரளித்துள்ளார். இதில், கடையிலிருந்த சிசிடிவி காட்சியின் அடிப்படையில், விசாரணை நடத்தி வந்த போலீசார், கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த அஃப்சர் பாஷா என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 ஆப்பிள் ஐ போன், 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், அஃப்சர் பாஷாவை சிறையில் அடைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்