திருட்டு குடி குடித்த இளைஞர்கள்...மரண அடி அடித்த ஊர் மக்கள் - போதை தெளிய வைத்த போலீஸ்
வேடசந்தூரில் இரும்பு கம்பிகளை திருடி மதுபானம் வாங்கி குடித்ததாக கூறப்படும் நபர்களை, பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கடைவீதியில், இருப்புக்கடையும் அதனையொட்டி குடோனும் இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று அந்த குடோனில் இருந்து இருவர், இரும்புகளை திருடி சென்று மற்றொரு இரும்பு கடையில் விற்றுவிட்டு, மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இரும்புக்கடையின் உரிமையாளர், பொதுமக்களோடு சேர்ந்து இரண்டு நபர்களையும் தாக்கியுள்ளார். இதனிடையே தகவலறிந்த போலீசார், விரைந்து வந்து இரண்டு இளைஞர்களிடமும் விசாரணை நடத்தினர். அப்போது அந்த இளைஞரில் ஒருவர் போதையில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவரை தண்ணீர் தெளித்து எழுப்பிய போலீசார், இரண்டு இளைஞர்களையும் இன்று விசாரணைக்கு வருமாறு கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
Next Story