ஓரினச் சேர்க்கையாளர்கள் 5 பேரை சரமாரியாக சுட்டுக்கொன்ற இளைஞர்
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் ஓரின சேர்க்கையாளர் இரவு விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலராடோ ஸ்பிரிங்ஸ் நகரில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் 25 பேர் படுகாயம் அடைந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஆண்டர்சன் லீ ஆல்ட்ரிச் என்ற 22 வயது இளைஞர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.
LGBTQ சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கான க்ளப் கியூ எனும் இரவு விடுதியில் வெறுப்புணர்வு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
"வெறுப்புணர்வை சகித்துக் கொள்ள முடியாது" என அமெரிக்க அதிபர் பைடன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நாட்டின் முதல் ஓரினச்சேர்க்கையாளர் ஆளுநரான கொலொராடோ ஆளுநர் ஜாரெட் போலிஸ், இந்த துப்பாக்கிச் சூடு "அறிவற்ற தீய செயல்" என்று தெரிவித்துள்ளார்...