"நமக்கு இதெல்லாம் தேவையா கோபி"...காதில் ப்ளூடூத் அணிந்து டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிய இளைஞர்..வலை வீசி தேடும் போலீசார்

x

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் தேர்வு கடந்த 27-ஆம் தேதி, வேலூரில் 10 மையங்களில் நடைபெற்றது. காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில், விருதம்பட்டைச் சேர்ந்த அப்துல் பயாஸ் என்ற இளைஞர் காதில் அடிபட்டுள்ளதாக கூறி, காதில் கட்டு போட்டு தேர்வு மையத்துக்குள் சென்றுள்ளார். தேர்வு எழுதும் போது அவர் பேசிக்கொண்டிருப்பதை கண்ட கண்காணிப்பாளர் சந்தேகமடைந்து சோதனை செய்தபோது, அவர் காதில் ப்ளூடூத் ஏர்பட்ஸ் அணிந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை தேர்வு மையத்தில் இருந்து வெளியேற்றினர். இதுகுறித்து தேர்வு மைய கண்காணிப்பாளர் அளித்த புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்த காட்பாடி போலீசார், தலைமறைவாக உள்ள அப்துல் பயாசை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்