பாலத்தை கடந்தபோது திடீரென சரிந்த சாலையால் இளைஞருக்கு நேர்ந்த கதி | Madurai | Bike Accident |
மதுரையில் திடீரென சாலை சரிந்து, இருசக்கர வாகனத்தோடு இளைஞர் பள்ளத்தில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் துவரிமானை சுதர்சன் என்பவர், நாகமலை புதுக்கோட்டையில் இருந்து தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அச்சம்பத்து பகுதியில் கட்டப்பட்டு வரும் பாலத்தை கடந்தபோது, சாலை திடீரென சரிந்துள்ளது. இதனால் சுதர்சன் நிலைதடுமாறி, கால்வாய் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட 10 அடி ஆழ பள்ளத்தில் விழுந்துள்ளார். பொதுமக்கள் சுதர்சனை மீட்ட நிலையில், அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story