பேஸ்புக்கில் வேலை தேட சென்று... காதல் வாங்கி வந்த இளைஞர்... கடல் கடந்து கரம் பிடித்த காதல்ஜோடி
பேஸ்புக்கில் வேலை தேட சென்று... காதல் வாங்கி வந்த இளைஞர்... கடல் கடந்து கரம் பிடித்த காதல்ஜோடி
மதுரையைச் சேர்ந்த காளிதாஸ் என்பவருக்கும் ஐரோப்பாவைச் சேர்ந்த இளம்பெண்ணிற்கும் தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் கோலாகலமாக நடைபெற்றது...
திருமங்கலத்தைச் சேர்ந்த காளிதாஸ் என்ற இளைஞர் ஜெர்மனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
கொரோனா காலத்தில் வேலை இழந்த இவர் முகநூல் வழியாக வேலை தேடிய போது, இவரைப் போலவே முகநூலில் வேலை தேடிய ஐரோப்பாவைச் சேர்ந்த ஹாணா பொம்க்லெவா என்பவருடன் காதல் மலர்ந்துள்ளது...
இருவரும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்த நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் இன்று ராமேஸ்வரம் பத்ரகாளியம்மன் கோயிலில் உற்றார் உறவினர்கள் முன்னிலையில் தமிழ் கலாச்சாரப்படி திருமணம் செய்து கொண்டனர்...
Next Story