பையனுக்கு ஜான் சீனானு நினைப்பு போல.. Smack போட வந்த இளைஞர்.. கழுத்தோடு சேர்த்து சாத்திய போலீஸ்

x

சென்னை ஜி.கே.எம் காலனி பகுதியில், மது போதையில் தள்ளாடிக்கொண்டிருந்த சாந்தகுமார் என்ற 18 வயது இளைஞர், சாலையில் சென்றோரிடம் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதையறிந்து அங்கு சென்ற ரோந்து போலீசார் வீட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியபோது, போதை தலைக்கேறிய சாந்தகுமார், கடும் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டார். நிற்க கூட முடியாமல் தள்ளாடிக்கொண்டே, போலீசாரையும் தாக்கினார். மேலும், குத்துச்சண்டை போட்டு காவலர்களை சரமாரியாக தாக்கியதால், பொதுமக்கள் உதவியுடன் பிடித்து நண்பர்களிடம் ஒப்படைத்து வீட்டில் விட சொல்லி அறிவுறுத்தினர். ஆனால், வீட்டுக்கு செல்லும் வழியில் இருசக்கர வாகனங்களை அடித்து உடைத்துள்ளார். இதையடுத்து, முழு போதையில் இருந்த சாந்தகுமாரை பிடித்து, அரசு மருத்துவமனையில் அனுமதித்து கண்காணித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்