நடைமேடையில் நின்ற இளைஞரை ஒரே நொடியில் அடித்து தூக்கிய ரயில்.. ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய நண்பர்..அதிர்ச்சி காட்சி

x

நடைமேடையில் நின்று டிபன் பாக்ஸ் கழுவிக் கொண்டிருந்தவர் மீது ரயில்மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.... நடந்ததை முழுமையாக விளக்குகிறது இந்த தொகுப்பு....

நெஞ்சை பதறவைக்கும், இந்த காட்சி , மகராஸ்ட்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் நடந்திருக்கிறது. அஜாக்கிரதையால், கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்திருக்கிறது இந்த கோர சம்பவம்

மகாராஷ்டிராவில், மலாட் என்னும் பகுதியில், சிறிய ரயில் நிலையம் ஒன்று உள்ளது. சம்பவத்தின் போது, மூன்றாவது நடைமேடையில் விளிம்பில் 17 வயது இளைஞர் மயாங்க் ஷர்மா டிபன் பாக்ஸை கழுவி தண்டவாளத்தில் ஊற்றிக் கொண்டிருந்தார்.

கூடவே அவரது நண்பரும் இருக்க, இருவரும் பேசிக் கொண்டே இந்த வேளையை செய்து கொண்டிருந்தனர்.

ரயில் வருவதற்கு முன் வந்த அறிவிப்பையோ, ரயில் எழுப்பிய ஹாரன் சத்தங்களையோ இருவருமே கவனிக்கவில்லை

அந்த நடைமேடையில் அதிவேகமாக ரயில் வந்து கொண்டிருக்க, நண்பர் மட்டும் வேகமாக ஓடி தப்பித்துக் கொண்டார். மயாங்க் ஷர்மா என்ன நடக்கிறது என்று சுதாரிக்கும் முன்னரே, ரயில் அவர்மேல் மோதி வேகமாக கடந்து சென்று விட்டது.

தூக்கிவீசப்பட்ட அவர், பேச்சு மூச்சின்றி கிடக்க நணர்பகள் அவரை எழுப்பி பார்த்தனர். எந்த அசைவும் இல்லாத நிலையில், கண்டிவாலி பகுதியில் இருக்கும் சதாப்தி மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். மயாங்க் ஷர்மாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ரயில் நிலையத்தில், தண்டவாளங்களை ஏறிக்கடந்து செல்வது, ரயில் படிகளில் நின்று பயணிப்பது போன்றவை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டாலும் இது போன்ற விதி மீறல்களை மக்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

அதே போல், ரயில் நடைமேடைக்கு வரும்போது, மிக அருகில் நிற்பது விபத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் அஜாக்கிரதை காரணமாக இது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

மக்கள், ரயில் நிலையங்களில் விழிப்புணர்வோடு நடந்துகொள்ளவேண்டும் என்று அறுவுறுத்துகின்றனர் ரயில்வே நிர்வாகத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்