காதலன் வீட்டுக்கு சென்ற பெண் சடலமாக மீட்பு.. வெளிநாட்டிற்க்கு தப்பியோடிய இளைஞர்.. - இண்டெர்போல் உதவியோடு போலீஸ் அதிரடி

x

சென்னையில் இந்திய உணவு கழக பெண் ஊழியர் கொலை வழக்கில், அவரது காதலனை பிடிக்க 8 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் ரெட் கார்டு நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளது...

சென்னை, சூளையில் வசித்து வந்தவர் அருணா சீனிவாசன். இந்திய உணவு கழகத்தின் ஊழியரான இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு நம்மாழ்வார் பேட்டையில் கொலை செய்யப்பட்டார். சம்பவத்தன்று, நம்மாழ்வர்பேட்டையில் உள்ள தனது காதலன் தினேஷின் வீட்டுக்கு சென்ற அவர், அன்று மாலையில் காதலனின் காரில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், தலைமறைவான அருணா சீனிவாசனின் காதலனை தேடி வந்தனர். இதையடுத்து, தினேஷை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்த நிலையில், அவர் வெளிநாட்டிற்கு தப்பியோடி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், தினேஷை பிடிக்க தனிப்படை அமைத்துள்ள போலீசார், அவரை சர்வேத குற்றவாளியாக அறிவித்து ரெட் கார்டு நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளனர். இதில், இந்திய தூதரகத்திற்கு தினேஷ் குறித்தான தகவல்களை அனுப்பி, அவரை இண்டெர்போல் உதவியுடன் கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்