அமைச்சரிடம் ஆவேசமாக பேசிய பெண்...செங்கல்பட்டில் பரபரப்பு
செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில், தமிழக அரசு சார்பில் 338 ஏக்கரில் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்காக அரசு நில ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இந்நிலையில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை பார்வையிட்டார். அப்போது அமைச்சரிடம் ஆவேசமாக பேசிய பெண், வீடுகளை இடித்து விட்டதால் எங்கு செல்வது என தெரியாமல் திண்டாடுவதாக முறையிட்டார். இதையடுத்து ஆப்பூர் பகுதியில் தனி வீட்டு மனை பட்டா ஒதுக்கி உள்ளதாக கூறி, அதற்கான ஆணையை அந்த பெண்ணிடம் அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
Next Story