பாவம் பார்த்து தங்க இடம் கொடுத்த மூதாட்டியை எரித்து கொன்ற பெண் - கண்ணை மறைத்த கள்ளக்காதல்

x

திருவண்ணாமலை பேய்கோபுரம் பகுதியை சேர்ந்த 65 வயது மூதாட்டியான விஜயா, தனியாக வசித்து வந்த நிலையில், அவரது வீட்டில் காஞ்சனா என்பவர் வாடகைக்கு இருந்துள்ளார்.

கணவனை இழந்த காஞ்சனா, அதே பகுதியை சேர்ந்த ஞானவேல் என்பவருடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார்.

சொந்தம் பந்தம் யாரும் இல்லாமல் தனியாக இருந்து வரும் மூதாட்டியின் சொத்தை அபகரிக்க, காஞ்சனா, தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார்.

இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டபோது, காஞ்சனா கீழே தள்ளியதில், தலையில் அடிபட்டு விஜயா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர், இருவரும் சேர்ந்து, விஜயாவின் உடலை ஆட்டோவில் எடுத்துச் சென்று, கண்ணமடை காட்டுப் பகுதியில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளனர்.

பாதி எரிந்த நிலையில் சடலம் கிடப்பதாக வந்த தகவலை அடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், சொத்துக்காக காஞ்சனாவும், ஞானவேலுவும் திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்ததை அடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்