நாளை உருவாகப்போகும் காற்றழுத்தம்... வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு
தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை (27.01.23) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது அடுத்த மூன்று தினங்களில் மேற்கு- வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Next Story