தொழிலாளியை தாக்கிய காட்டு யானை...உடலை எடுக்க விடாமல் 5 மணி நேரம் உறவினர்கள் போராட்டம்
நீலகிரி மாவட்டம் ஓவேலியில் காட்டு யானை தாக்கியதால் தோட்டத் தொழிலாளர் உயிரிழந்த நிலையில், உடலை எடுக்க விடாமல் 5 மணி நேரம் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட டெல்லோஸ் பகுதியைச் சேர்ந்த சிவனாண்டி என்பவர், தனியார் தேயிலை தோட்டத்திற்குள் விறகு சேகரிக்க சென்றபோது காட்டு யானை தாக்கியதால், சம்பவ உயிரிழந்தார்.
தகவலறிந்து சென்ற வருவாய், வனத்துறை மற்றும் காவல்துறையினருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உடலை எடுக்க விடாமல் 5 மணி நேரமாக போராட்டம் நடத்தியதால், அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
சிவனாண்டியின் மகனுக்கு அரசு வேலை, குடியிருப்புப் பகுதிகளை சுற்றி சோலார் மின் வேலிகள் அமைப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
பின்னர், சிவனாண்டியின் உடல் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.