திருந்தி வாழ நினைத்த மனைவி..காதலனை ஓடவிட்டு வெட்டிய கணவன் - கோவை அருகே பயங்கரம்

x

கோவை மாவட்டம் சூலூர் அருகே, திருந்தி வாழ நினைத்த மனைவிக்காக, கள்ளக்காதலனை ஓட ஓட விரட்டி கணவன் கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை புதூர் அறிவொளி நகர் பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர், பாப்பம்பட்டி பிரிவு அருகே உள்ள செல்வராஜா மில் பகுதியில் வேலை முடித்து விட்டு வீட்டிற்கு கொண்டிருந்தார். அப்போது அவரை சந்திரன் பிரகாஷ் என்பவர், ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டினார். இதில், இடது கை மற்றும் கழுத்து பகுதியில் ஆனந்திற்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், சந்துரு அங்கிருந்து தப்பியோடினார். தகவலின் பேரில் வந்த போலீசார், ஆனந்த்திடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சந்துருவின் மனைவியுடன் கடந்த 2 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்ததாகவும், இதுசம்பந்தமாக சந்துருவுடன் முன்விரோதம் இருந்து வந்ததாகவும் தெரிவித்தார். அதன் பிறகு ஆனந்தை மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், தலைமறைவாகி இருந்த சந்திரன் பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்