வீடு திரும்பிய கணவனுக்கு ஷாக் கொடுத்த மனைவி.. கத்தியால் சரமாரியாக குத்திய கணவன் - கோவையில் அதிர்ச்சி சம்பவம்
கோவை அருகே, தகாத உறவில் இருந்த மனைவியை, கணவன் சமையல் கத்தியால் உடல் முழுவதும் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூலூர் அடுத்த பள்ளபாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் - நிவேதா தம்பதிக்கு, 2 குழந்தைகள் உள்ளன. நிவேதாவுக்கு அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கணேசனுக்கு தெரிய வர, நிவேதாவை கண்டித்ததாக கூறப்படுகிறது. கணவர் பலமுறை கண்டித்தும் கேட்காமல் நிவேதா தொடர்ந்து முருகனுடன் பழகி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், பணியை முடித்து விட்டு கணேசன் வீடு திரும்பியபோது, முருகனுடன் நிவேதா தனிமையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த கணேசன், சமையலுக்கு பயன்படுத்தும் கத்தியைக் கொண்டு நிவேதாவை சரமாரியாக குத்திவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கணேசனை தேடி வருகின்றனர்.