கணவன் இறந்த மறுநொடி உயிர்விட்ட மனைவி.. ஒரே பல்லக்கில் ஜோடியாக இருவரும்.. கதறிய பிள்ளைகள்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே, கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
அச்சரவாக்கம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமு என்பவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கணவர் இறந்த துக்கத்தில் அழுது கொண்டிருந்த மனைவி தங்கமணி, திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு தங்கமணி ஏற்கனவே இறந்து விட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். கணவன், மனைவி இருவரையும் அடக்க செய்ய ஒரே வாகனத்தில் கொண்டுச் சென்ற போது, துக்கம் தாங்காமல் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது, அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story