கணவர் உயிரிழந்த 4 மணி நேரத்தில் மனைவியும் மரணம். - இறப்பிலும் இணைப் பிரியாத தம்பதி!

x

திருத்துறைப்பூண்டி அருகே, இணைப் பிரியாமல் வாழ்ந்துவந்த தம்பதி, ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது...

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் அப்துல் சலீம் - மும்தாஜ் தம்பதி. இவர்கள் கடந்த 37 ஆண்டுகளாக இணைப் பிரியாத தம்பதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். இதனிடையே, மும்தாஜ் வயது மூப்பு காரணமாக நோய்வாய்ப்பட்ட நிலையில், அவருக்கு மருந்து வாங்குவதற்காக சென்ற அப்துல் சலீம் போகும் வழியில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தார் இடையே சோகத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து, உடல்நலத்தை கருத்தில் கொண்டு மும்தாஜிடம் அவரது கணவர் உயிரிழந்ததை தெரிவிக்காமல் இருந்துள்ளனர். இதனையடுத்து யாரும் எதிர்பார்க்காத வகையில், கணவர் உயிரிழந்த 4 மணி நேரத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட மும்தாஜும் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்