நொடிக்கு நொடி மாறும் வானிலை.. ஒரு பக்கம் வெயில்.. ஒரு பக்கம் மழை.. 55 கி.மீ வேகத்தில் வீசப்போகும் சூறாவளி
தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வரும் 16ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. மேலும், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story