எட்டி உதைத்தாலே பெயர்ந்து வரும் சுவர்கள் ரூ.2.78 கோடிக்கு பட்டை நாமம்..வருத்தம் தெரிவித்த வியாபாரிகள்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் சந்தை வளாகம் பயன்பாட்டிற்கு வரும் முன்னரே இடிந்து விழும் நிலையில் இருப்பதாக பொதுமக்கள், வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். குமாரபாளையம் பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வந்த சந்தையை தரம் உயர்த்தும் வகையில், 2 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பில், தினசரி காய்கறி கடைகள் அடங்கிய சந்தை வளாகம், கடந்த 18 மாதங்களாக கட்டப்பட்டு வருகிறது. மக்கள் பயன்பாட்டிற்கு வராத நிலையில், கடைகளுக்கான கான்கிரீட் பூச்சு பெயர்ந்து வருவதுடன், பில்லர்கள் உறுதியற்ற தன்மையில், உதிர்ந்து வருவதாக பொதுமக்கள், வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கழிவறையில் உள்ள சுவர்கள் கையோடு பெயர்ந்து வருவதாகவும் கூறியுள்ளனர்.
Next Story