கணவன் பிரிந்த அடுத்த நொடியே.. இறப்பிலும் பிரியாத உயிர்கள்.. நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சோக சம்பவம்..

x

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் கணவர் இறந்த துக்கம் தாளாமல் மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

80 வயதான டேனியல் பாலகிருஷ்ணனும், 74 வயதான அவரது மனைவி வெண்ணிலாவும் லட்சுமிபுரம் பகுதியில் வசித்து வந்தனர்...அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி டேனியலும், ஆசிரியராக பணியாற்றி வெண்ணிலாவும் ஓய்வு பெற்றுள்ளனர்... இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ள நிலையில், நேற்று முன்தினம் டேனியல் பாலகிருஷ்ணன் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், கணவர் இறந்த துக்கம் தாளாமல் இருந்து வந்த வெண்ணிலா, நேற்று பிற்பகல் வீட்டில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், வெண்ணிலா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்... இறுதி காலத்தில் ஆசிரிய தம்பதி மரணத்திலும் இணை பிரியாமல் ஒன்றிணைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்