"அடுத்தகட்ட தாக்குதலுக்கு தயாராகி விட்ட ஒன்றிய அரசு"- எம்பி சு.வெங்கடேசன்
மொழி உரிமை, பன்மைத்துவம் மீது அடுத்தகட்ட தாக்குதலுக்கு ஒன்றிய அரசு தயாராகிவிட்டது என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேந்திரிய, நவோதயா வித்யாலயாக்கள், ஐஐடி, ஐ.ஐ.எம், எய்ம்ஸ் மற்றும் ஒன்றிய அரசு பணி நியமனத் தேர்வுகள் எல்லாம், இனி இந்தி வழியில் நடத்த
மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அலுவல் பயிற்சிகளில், அலுவல் நிகழ்ச்சி நிரல்களில், தூதரகங்களின் தகவல் தொடர்பில் எங்கும் எல்லாம் இந்தி என்று கூறியுள்ள அவர், அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற அலுவல்
மொழிச் சட்ட குழுவின் 11 வது தொகுப்பில் இவற்றிற்கு பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாார்.
எட்டாம் அட்டவணையின் அனைத்து மொழிகளுக்கும் சமத்துவம் என்ற கோரிக்கை காற்றில் பறப்பதாகவும், ஆனால் அதை தமிழகம் அனுமதிக்காது என்றும் கூறியுள்ளார்.
Next Story