கோயில் கரை பிரச்சனையில் மோதிய இரு தரப்பினர்...வட்டாட்சியர் எடுத்த அதிரடி முடிவு
புதுக்கோட்டை அருகே இரு தரப்பினர் இடையேயான பிரச்சனை காரணமாக இன்று நடைபெற இருந்த திருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் உள்ள பட்டவையனார் கோயில் கரை தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்சனை நிலவி வந்த நிலையில், கோயில் திருவிழா காரணமாக அப்பிரச்சனை மீண்டும் தீவிரமடைந்தது. இதனையடுத்து இரு தரப்பினரிடமும் ஆலங்குடி வட்டாட்சியர் நடத்திய சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடியவே, இரு தரப்பினரும் வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற இருந்த பட்டவையனார் கோயில் பால்குடத் திருவிழாவிற்கு வட்டாட்சியர் தடை விதித்துள்ளார். இதனால் கீரமங்கலம் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிற
Next Story