தத்தளிக்கும் தலைநகர்... கெஜ்ரிவால் திடீர் வேண்டுகோள்..!

x

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் யமுனை நதியின் நீர்மட்டம் உயர்ந்து வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், யமுனை ஆற்றின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார். அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் பொதுமக்கள் தங்கிக்கொள்ளலாம் என்றும் பொதுமக்கள் வெள்ள நீரை மக்கள் பார்க்க செல்ல வேண்டாம் என்றும் கெஜ்ரிவால் தெரிவித்தார். முன்னதாக, ஹரியானா மாநிலம் ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதே யமுனையில் நீர்மட்டம் உயர காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கெஜ்ரிவால் கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்