பறவைகளின் வீடாக இருந்த மரம்... வெட்டி சாய்த்த கொடூரர்கள்... கொத்துக் கொத்தாக இறந்த சோகம்
கேரள மாநிலம் மலப்புறத்தில் பறவைகளின் புகலிடமாக திகழ்ந்த மரத்தினை வெட்டி சாய்த்த நபர்கள் மீது கேரள வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர
கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்திற்கு உட்பட்ட வி.கே.படி பகுதியில் சாலைவிரிவாக்க பணிகளுக்காக மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.
அவற்றில் பழமை வாய்ந்த மரம் ஒன்று வெட்டபட்ட போது, மரத்தில் இருந்த ஏராளமான பறவைகள் தப்பி பறந்த நிலையில், சில பறவைகள் தரையில் விழுந்து உயிரிழந்தன.
பறக்கும் பருவத்தை எட்டாத ஐம்பதுக்கும் மேற்பட்ட பறவை குஞ்சுகள் உயிரிழந்ததால், மரத்தை வெட்டியவர்கள் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மரம் வெட்டி சாய்க்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகின்றன
Next Story