பரிதாப பலியான சிறுவன் - உறவினர்கள் போராட்டம்
பள்ளி வாகனத்தில் இருந்து இறங்கிய 1ம் வகுப்பு மாணவன் பேருந்து மோதி உயிரிழந்த விவகாரத்தில், விரக்தியில் பள்ளி திறந்த முதல் நாளான இன்று பள்ளியின் முன்பாக தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.சிவகங்கை அருகே மேல வாணியங்குடியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் படித்த 1ம் வகுப்பு மாணவர் விஜின் இளவரசன் கடந்த மார்ச் 23ம் தேதி, பள்ளி முடிந்து பள்ளி வாகனத்தில் வீடு திரும்பிய போது பலியானார்.இந்நிலையில் இறந்த சிறுவனின் சான்றிதழை வழங்காமல் பள்ளி நிர்வாகம் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளான இன்று பள்ளியைத் திறக்கக் கூடாது என அங்கு
பெற்றோர் போராட்டம் நடத்தினர். அப்போது உறவினர் ஒருவர் உடலில் மண்ணெண்ணெ ஊற்றி தீக்குளிக்க முயன்றார்இதனால் அங்கு பரபரப்பு நிலவிய நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர், பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.