சாலையில் தண்ணீர் குடித்த புலி அசையாமல் நின்ற வாகன ஓட்டிகள்..
உத்தரபிரதேசத்தின் கதர்னியாகாட் வனவிலங்கு சரணாலயம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வங்கப் புலி தண்ணீர் குடித்துக் கொண்டிருந்ததால், போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டது. வெயிலின் தாக்கத்தின் காரணமாக தாகத்தில் இருந்த புலி ஒன்று, சாலையோரம் தேங்கி இருந்த நீரை குடித்துக் கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தியதால், அப்பகுதியில் சிறிது நேரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
Next Story