மோப்ப நாய்க்கு வைத்திருந்த அந்த பொருள்.. நைசாக திருடி மாட்டிக்கொண்ட காவலர்கள்..
புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை காவல்துறையில் பணியாற்றி வருபவர்கள் அஸ்வந்த், சேவியர் ஜான் மற்றும் பழனிச்சாமி. இவர்கள் மோப்பநாய் பிரிவிலும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே, மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்கள் சோதனை மேற்கொண்டார். அப்போது மோப்ப நாய் பயிற்சிக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட கஞ்சா காணாமல் போய் இருப்பது தெரியவந்தது. காவலர்கள் 3 பேரை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் கஞ்சாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து பயன்படுத்தியததும் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததும் உறுதியான நிலையில் பணியிடை நீக்கம் செய்ததோடு துறை ரீதியான விசாரணையும் நடந்து வருகிறது.
Next Story